அங்கத்தவர்

ஆலய அங்கத்தவர்கள்

ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தின் அங்கத்தவர்களுக்கான விதி முறைகள்

 

01. அங்கத்தவர்களாகச் சேர்வதற்கு வயதெல்லை கிடையாது.

02. அங்கத்தவர்கள் ஹிந்து மதத்தை தழுவியவர்களாக இருத்தல் வேண்டும்.

03. ஆன்மீகத்தில் ஈடுபாடுடையவர்களாக இருத்தல் வேண்டும்.

04. நல்ல சமயக் கலாச்சாரப் பண்புடையவர்களாகவும், அவற்றில் நாட்டமுடையவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தால் அங்கத்தவர்களுக்குக் கிடைக்கும் அனுகூலங்கள்.

 

01. ஆலயத்தால் ஹிந்துக்கள் என உறுதிப்படுத்தி அடையாள அட்டை வழங்கப்படும்.

 

02. ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் என்று ஆலயத்தால் உறுதிப்படுத்தி பத்திரம் வழங்கப்படும்.

 

03. ஆலயத்தில் அங்கத்தவர்களாக உள்ள குழந்தைகள் பெரியவர்கள் முதலானவர்களுக்கு பாடசாலை விடுமுறைக் காலங்களில் ஓரிரு வாரம் ஆலயத்தில் தங்கி நின்று ஹிந்து மதத் தத்துவங்கள் பூஜைகள், தேவாரம், மற்றும் புராணபடலங்கள் போன்றவற்றை பயில்வதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

 

04. ஆலயத்தில் அங்கத்தவராக இருப்பவர் தன்னடைய குடும்பததிற்காக இந்து மதம் சம்பந்தமான உதவிகளை பெற முடியும்.

 

05. அங்கத்தவர் ஒருவர் வருட சந்தாவாக 60 யூரோ (அறுபது யூரோ) செலுத்துவாராயின், அவர்களுக்கு விஷேட சலுகைகளும் உண்டு.

 

06. அங்கத்தவர்களாக இருப்பவர்களுக்கு ஆலயத்தில் நடைபெறும் விழாக்கள் போன்றவற்றின் நிகழ்ச்சி நிரல்கள் அனுப்பி வைக்கப்படும்.

 

07. வருஷ சந்தா செலுத்தும் அங்கத்தவர்களுக்கு அவர்களது குடும்பப் பெயரில் வருடத்திற்கு ஒருமுறை விஷேட பூசை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

 

08. மாதம் தோறும் பௌர்ணமியில் அவர்களது பெயர்களுக்கு அர்ச்சனை செய்யப்படும்.

 

09. இந்தியா தல யாத்திரை செல்பவர்களுக்கு உதவிகள் செய்து தரப்படும்.

 

10 அங்கத்தவராக உள்ள ஒருவர் இலங்கைக்கு சென்றால் அங்கு ஆலயத்தால் அமைக்கபட்டிருக்கும் ஆசிரமத்தில் தங்கி வருவதற்கான வசதிகள் செய்து தரப்படும்.

 

அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புகிறவர்கள் கீழ்வரும் படிவத்தை தரவிறக்கம் செய்து முழுமையாக நிரப்பி கையொப்பமிட்டு ஆலய முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

 

படிவத்தை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.