கேள்விகள்

பொதுவாக ஏற்படும் கேள்விகள்

01. தர்மம் கொடுப்பவர்களைத் தடுப்பது.

02. கோயிலுக்கு செல்பவரைப் பார்த்து பரிகாசம் செய்தல்.

03. பொய்சாட்சி கூறுதல்.

04. நன்றி மறத்தல்.

05. புறம் கூறுதல்.

06. தனக்கு உரிமை இல்லாத பொருட்கள் மீது உரிமை கொண்டாடுதல்.

07. மற்றவருக்கு உரிய பொருட்களை அபகரித்தல்.

08. மாற்றான் மனைவியின் மோகம் கொள்ளுதல், அபகரித்தல்.

09. பெரியவர்களை, தாய், தந்தையை தூசித்தல்.

10. குருமார்களை நிந்தித்தல்

11. பொறாமை கொள்ளுதல்.

12. மற்றவருக்கு தீங்கு இழைத்தல்

13. ஒருவனுக்கு ஒரு பொருளை தருவதாக கூறி பின் தராதிருத்தல்.

14. ஒரு பொருளை தானம் கொடுப்பது போல கொடுத்து பின்பு அபகரித்தல்.

15. மதம் மாறுதல்.

16. தாய், தந்தையர் சொல் மீறுதல்.

17. வீட்டுக்கு நெருப்பு வைத்தல்.

18. கோயில் சொத்தைத் திருடுதல்.

19. பிறரை ஏமாற்றுதல்.

20. கோவில் குளங்களை மூடுதல்.

21. பசுவைக் கொலை செய்தல்.

22. அந்தணரை அடித்தல்.

23 வேதம் ஓதுபவரைப் பழித்தல்.

24. அன்னத்தை மிதித்தல்.

tl_files/fM_k0002/photos/Tempel Bilder2/Kovil Varum Pothu.jpg

குளித்து தோய்த்து உலர்ந்த ஆடை அணிந்து சுவாமிக்கு வேண்டிய பால், பழங்கள், மலர்கள் இவைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டும் அகசுத்தியுடனும் செல்லுதல் வேண்டும்.

 

கோயிலை அன்மித்தவுடன் கோபுரத்தை வணங்கி (கோபுரதரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள்) கோவிலுக்குள் செல்வதற்கு முன்பாக தங்களின் பாதணிகளை கழற்றி கால்களை சுத்தம் செய்து வழிபாட்டுக்கு தேவையற்ற பொருட்களை (கைத்தொலைபேசி, புகைப்படக்கருவி, ஒளிப்படக்கருவி போன்றவை) தவிர்த்து அவற்றை ஆலயத்துக்குள் எடுத்துச் செல்லாது கோயிலுக்குள் பிரவேசிக்கும் போது கோபுர வாயிலின் படியைத் தொட்டு வணங்குதல் வேண்டும்.

 

பின்னர் கொடிமரத்திற்கு முன்னால் நின்று ஆணவம், கன்மம், மாயை என்கின்ற துற்குணங்களை நீக்கி வலம் சென்று கன்னிமூலையில் வீற்றிருக்கும் கணபதியை வணங்கி பின்பாக கற்பக்கிரகத்திங்கு முன்பக வந்து மூலஸ்தானத்தில் வீ்ற்றிருக்கும் மூலவரை வழிபட்டு இரண்டாவது வலத்தில் பரவார தெய்வங்களை வழிபட்டு. மூன்றாவது வலத்தில் சண்டேஸ்வரரை வழிபடுவதே சாலச்சிறந்ததாகும். சண்டேஸ்வரரை வணங்கும் போது மிக அமைதியாக மூன்று முறை கைகளைத்தட்டி அன்றை வழிபாட்டின்’ பலனை பெறவேண்டும். முக்கியாமாக சண்டேஸ்வரர் வழிபாட்டின் போது பலமாக கைதட்டுதல் மற்றும் தாங்கள் அணிந்திருக்கும் நூல் இழையை அறுத்துப் போடுதல் போன்ற செயல்களை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

 

சண்டேஸ்வர வழிபாட்டின் பின்பாக மீண்டும் கொடிமரத்திற்கு முன்பாக வந்து ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும்.

 

நமஸ்காரம் செய்யும் போது கவனிக்கப்பட வேண்டியவை.

 

1. எமக்கு பக்கத்தில் பெரியவர்கள் யாராவது நிற்கிறார்களா? என்று பார்க்க வேண்டும் காரணம் நாம் வீழ்ந்து வணங்கும் போது அவர்கள் மீது எமது பாதமோ, கைகளோ படக்கூடாது.

 

2. மற்றவர்களின் வழிபாட்டுக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் நமஸ்காரம் செய்தல் வேண்டும்.

 

3. கால்கள் தெற்கு நீட்டி தலை வடக்கு நோக்கி வணங்குவதே உத்தமமாகும்.

 

4. ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், சாஸ்டாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும். பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும்.

tl_files/fM_k0002/photos/Tempel Bilder2/namaskaram.jpg

 

இவ்வாறு வழிபாடுகள் செய்த பின் வீடு செல்வதற்கு முன்பாக சற்று நேரம் அமைதியாக உட்கார்ந்து எல்லாச் சுவாமிகளையும் தியானம் செய்து பின் எழுந்து ஆலயத்தால் வழங்கப்படும் பிரசாதங்களை பரிசாதகர்களிடம் கைகூப்பி வணங்கி பிரசாதத்தை வாங்கி கீழே சிந்தாமல் சாப்பிடுதல் மகா புண்ணியத்தைச் சேர்க்கும்.

01. தெய்வங்களின் திருநாமங்கள், ஸ்தோத்திரங்களை உச்சரித்தல்.

02. மௌனமாய் இருத்தல்.

03. பிறருக்கு இடையூறு செய்யாமல் தரிசனம் செய்தல்.

04. வழிபாட்டில் அவசரம் காட்டாதிருத்தல்.

05. ஆலயத்தைச் சுத்தமாக வைத்திருக்க உதவுதல்.

06. சமயச் சின்னங்களை தரித்திருத்தல் (விபூதி,சந்தனம்,குங்குமம்) போன்றன.

07. ஆலய சம்பந்தப்பட்ட திருப்பணிகளில் இயன்ற உதவிகளைச் செய்தல்.

08. பூஜைக்கு உகந்த பொருட்ககள கொடுத்து உதவுதல்.

09. மெதுவாய் பிரதட்சணம் செய்தல்.

 

இப்படியான நற்செயல்களில் நாம் ஆலய வழிபாடுகளின் போது ஈடுபட்டால் நிச்சயமாக இறைவனின் அருள் எம்மை வந்தடையும்..

01. குளிக்காமல் ஆலயத்திற்குச் செல்வது.

02. உலராத ஈர உடையுடன் செல்வது.

03. தலையில் தொப்பி, தலைப்பாகையுடன் செல்வது.

04. சுவாமிக்குக் காலை நீட்டி உட்காருதல்.

05. சுவாமிகளைத் தொட்டு வணங்குதல்.

06. லௌகீக சம்பந்தமான உரையாடல்கள், வீண் பேச்சுக்கள்.

07. கோயிலின் உள்ளும் புறமும் அசுத்தம் செய்தல்.

08. தீபாராதனை நிகழும் போது எதிர் மறைத்தல்.

09. தீபாராதனை நிகழும் போது விழுந்து வணங்குதல்.

10. அபிஷேகம் நடக்கும் போது வரம் கேட்டல்.

11. சுவாமிகள் எண்ணைக்காப்பு அணிந்து இருக்கும் போது வரம் கேட்டல்.

12. வீபூதி மற்றும் பிரசாதங்களை பூமியில் சிந்துதல்.

13. மற்ற பக்தர்களுக்கு இடையூறு செய்தல்.

14.மனத்தை ஒருமுகப்படுத்தாமல் அலையவிடுதல்.

ஆம் நிச்சயமாக: ஏனெனில் அன்றாட வாழ்க்கையில் நாம் பல வித அசெளகரியங்களைச் சந்திக்க நேரிடுகிறது இவற்றிலிருந்து நாம் சற்றேனும் எமது மனதை முழுமைப்படுத்த வேண்டுமாயின் நிச்சியமாக நாம் ஆலயம் சென்று இறைவனை வழிபடவேண்டும்.