செய்திகள்

ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய கலாச்சார மைய கட்டிட பணிகள் ஆரம்பம்

ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய கலாச்சார மைய கட்டிட பணிகள் ஆரம்பம் இதன் முதற்கட்டமாக சுற்றுமதில் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. கலாச்சார மையத்தின் முக்கியத்துவத்தை பற்றி நாம் ஏற்கனவே பலதடவைகள் ஆலய இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கிறோம் ஆகவே இந்த முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுப்பனிக்கு அனைவரும் முன்வந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

இன்று ஐரோப்பாவில் அனைவருக்கும் சமயசேவை ஆற்றிவரும் எமது ஆலயம் உலகளாவிய ரீதியில் அனைவராலும் அறியப்பட்ட ஓர் ஆலயமாக திகழ்ந்து வருகிறது. அதுமட்டுமலாமல் யேர்மனிய மக்களால் மிகவும் போற்றப்படும் ஆலயமாகவும் இருந்து வருகிறது. ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய ஆரம்ப காலத்தில் நாம் அனைவரும் ஆலயகுருவுடன் சேர்ந்து ஆற்றிய திருப்பனியால் தான் இன்று ஐரோப்பாவில் எமது ஹிந்து சனாதன தர்மம் தனக்கென்று ஓர் சிறப்பான இடத்தில இருக்கிறது. அதன் தொடர் பணியாகத்தான் ஆலயகுரு அவர்களால் இந்த கலாச்சார மைய திருப்பணி சுமார் 8வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கம் ஐரோப்பா ரீதியில் எமது புலம்பெயர் சமுதாயத்துக்கு சமயப்பணி மற்றும் எமது கலாச்சார விழுமியங்களை அவர்களின் எதிர்கால சமுதாயத்தை கருத்திட்டதாக அமைகிறது.

 

சுற்றுமதிலுக்கான அத்திவாரம்

 

சுற்றுமதிலுக்கான அத்திவார பூமி தோண்டப்படுகிறது

அதாவது இப்போதுள்ள எமது சமுதாயம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ் மொழி மற்றும் ஹிந்து சனாதன தர்மத்தை கடைபிடிக்க வேண்டிய முக்கியத்துவம் இருக்கிறது ஆனால் இதற்கு அடுத்த பரம்பரை இதை ஓரளவு தான் கடைபிடிக்கும் இதற்கும் அடுத்த பரம்பரை அதைவிடவும் குறைவாகத்தான் கடைபிடிக்கும் அதற்கு காரணம்; நாம் வாழ்கின்ற நாடு மொழி மற்றும் சமய பழக்க வழக்கங்களால் முற்றிலும் மாறுபட்டதாகும் ஆகையால் தான் எமது எதிர்கால சந்ததியினருக்கு எமது கலை கலாச்சாரங்களை பின்பற்றுவதில் கஷ்டம் ஏற்படுகிறது.


எனவே இப்படியான சூழ்நிலை நாம் எமது எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படாமலிருக்க நாம் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும். நாம் செய்யும் ஒவொரு சிறு உதவியும் எமது சந்ததியினருக்கான கலாச்சார வித்தாக எண்ணி இபோதிருந்தே ஆலயகுருவுடன் இணைந்து இந்த பணியில் கலந்து கொள்ளும் வண்ணம் மிக அன்பாக அழைக்கின்றோம். சுற்று மதில் பணிகளில் பங்குகொள்ள விரும்புபவர்கள் நிதி மற்றும் பொருள்(சீமெந்து, கல்லு, இரும்புக் கம்பிகள்)உதவிகளும் செய்யலாம் மேலதிக விபரங்களுக்கு ஆலயத்துடன் தொடர்புகொள்ளவும்..

அன்று செய்யவேண்டியதை அன்றே செய்ய வேண்டும் அது தவறினால் அதன் பயனை முழுமையாக பெறுவதில் கஷ்டங்கள் ஏற்படும். அதே போல எமது கலைகலாச்சாரங்களை நாம் இன்று கட்டிக்காக்க தவறினால் எதிர்காலத்தில் எமது சிறப்புமிக்க கலை கலாச்சார மொழி மற்றும் சமயம் இவற்றை கடைபிடிப்பதிலும் கஷ்டங்கள் ஏற்பட வழிகோலும்.

ஜோதிடவகுப்பு

ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தால் மக்களின் நலன்கருதி நாம் எமது அனைத்து கலைகலாசார மற்றும் சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்ற வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு வேதங்களின் ஒரு அங்கமான சோதிடத்தை நாம் நமது காலத்துடன் விடாமல் எமது அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் ஒரு விசேட பணியாக மனித வாழ்வியலுக்கு நன்மை கொடுக்கும் சோதிடவகுப்பை ஆரம்பித்து வைத்துள்ளது. இந்த வகுப்பில் பங்குகொள்ள விரும்புவோர் ஆலயத்துடன் தொடர்புகொள்ளவும்.

காலத்தின் தேவை கருதி மிக விரைவாக அமையவிருக்கும் கலாச்சார மையம் பற்றிய விசேட அறிவித்தல்…

அம்பிகை அடியார்களே!

 

ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தால் மக்களின் நலன்கருதி எமது காலாசார பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு காட்டுமான பணிதான் இக் கலாச்சார மையம் ஆகும்.. ஆனாலும் நிதி நெருக்கடி காரணமாக இப்பணியை விரைவாக நிறைவேற்ற முடியாத நிலை இருந்து. இந்த நிலையை சமாளிக்கும் முகமாக  நாம்  இன்னொரு வழி முறையை உங்கள் முன் வைக்கின்றோம். அதாவது இந்த சிறந்த பணிக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் கீழ்காணும் இந்த வழிமுறைகளை கையாண்டு எமது கலை கலாச்சாரத்தை இந்த நாட்டில் நிலைநிறுத்த உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்..

 

பரிகார பூஜை செய்த யேர்மனிய அடியவர்கள்.

ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தில் யேர்மனிய அடியவர்கள் விசேட பரிகார பூஜை செய்வித்தனர். கடந்த மாதம் இந்தியா சென்று தமது ஜன்ம இலக்கின காண்டத்தை வாசித்து தாம் செய்ய வேண்டிய பரிகாரத்தை தெரிந்து அவற்றை ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள்  ஆலயத்தில் ஆலயகுரு அவர்களின் உதவியோடு விசேட  பரிகார பூஜை  செய்து மேலதிக விபரங்களையும் கேட்டு அறிந்தனர். உண்மையாகவே எமது சமயத்தின் தொன்மையும் அதன் தாட்பரியங்களும் இந்துக்களுக்கு மட்டுமல்ல உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் பொருத்தமானது என்பதை இந்த பரிகார பூஜை தெரிவித்து நிற்கிறது.