நற்சிந்தனை

நாம் வளமுடன் வாழ வேண்டுமானால் நிச்சயமாக ஆன்மீக நலலொழுக்கமும், நற்சிந்தனைகளும் எமக்கு வழிகோளுகின்றன.

வணங்கத்தக்கவர்கள் – தாயும் தந்தையும்

வந்தால் போகதாது – புகழ், பழி

போனால் வராதது – மானம், உயிர்

தானாக வருவது – இளமை, முதுமை

 

நம்முடன் வருவது – பாவம், புண்ணியம்

அடக்க முடியாதது – ஆசை, துக்கம்

நம்மால் பிரிக்கமுடியாதது – பந்தம், பாசம்

அடக்க முடியாதது – ஆசை துக்கம்

 

அழிவைத்தருவது – பொறாமை, கோபம்

எல்லோருக்கும் சமமானது – பிறப்பு, இறப்பு

கடைத்தேறவழி – உண்மையும், உழைப்பும்

ஒருவன் கெடுவது – பொய்சாட்சி, செய்நன்றி மறப்பது.

 

வருவதும் போவதும் – இன்பம், துன்பம்

மிக மிக நல்ல நாள் – இன்று

மிகப்பெரிய வெகுமதி – மன்னிப்பு

மிகப்பெரிய தேலவ – சமயோசித புத்தி

 

மிகக்கொடிய நோய் – பேராசை

மிகவும் சுலபமானது – குற்றம் காணல்

கீழ்த்தரமான விஷயம் – பெறாமை

நம்பக்கூடாதது – வதந்தி

 

ஆபத்தை விளைவிப்பது – அதிக பேச்சு

செய்யக்கூடாதது – தவறுகள்

செய்ய வேண்டியது – உதவி

விலக்க வேண்டியது – விவாதம்

 

உயர்வுக்கு வழி – உழைப்பு

நழுவக்கூடாதது – வாய்ப்பு

Load More

வாழ்க்கை ஒரு சவால் அதனைச் சாதியுங்கள்

வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு சாகசப்பயணம் அதனை மேற்கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு கடமை அதனை விளையாடுங்கள்

வாழ்க்கை ஒரு வினோதம் அதனை கண்டறியுங்கள்

வாழ்க்கை ஒரு பாடல் அதனைப் பாடுங்கள்

வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு பயணம் அதனை முடித்துவிடுங்கள்

வாழ்க்கை ஒரு உறுதிமொழி அதனை நிறைவேற்றுங்கள்

வாழ்க்கை ஒரு காதல் அதனை அனுபவியுங்கள்

வாழ்க்கை ஒரு அழகு அதனை ஆராதியுங்கள்

வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர் கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு குழப்பம் அதனை விடைகாணுங்கள்.

வாழ்க்கை ஒரு இலக்கு அதனை எட்டிப் பிடியுங்கள்.

கீதாசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.

 

– பகவான் கிருஷ்ணர்

Load More

01. ஒவ்வோர் இன்பமும் இறுதியில் துன்பமாகப் பரிணமிப்பதை ஒவ்வொருவரும் நாளடைவில் அறிவார்கள்.

 

02. காதுகள் இருந்தும், புண்ணியக் கதைகளைக் கேட்காதவன், பகுத்தறிவு இல்லாத பசுக்கள் முதலான பிராணிகளுக்கே ஒப்பாவார்கள்.

 

03. நல்லது செய்வோன் எவனும் நலிவுறுதல் இல்லை. அதே போன்று தீயது செய்பவன் எவனும் அதன் பலனை அனுபவிக்காமல் விட்டதுமில்லை.

 

04. இப் புவியில் பிறந்த எந்த மனிதனும் பிற மனிதனால் இரட்சிக்கப்படுகிறான் என்றோ, அழிக்கப்படுகிறான் என்றோ கூறுவது மடத்தனமானது.

 

05. உறுதியான மனமுடையோன் தான் செய்யும் காரியம் அனைத்தும் தான் செய்ததாகக் கருதமாட்டான்.

 

06. தெய்வத்தை மனிதன் யாண்டும் முழுமனதோடு ஆராதித்தால், அத் தெய்வத்தின் விபூதிகளெல்லாம் அம் மனிதனை வந்தடைகின்றன.

 

07. அரசமரத்தின் விதை கண்ணுக்குத் தெரியாது. அது மிகவும் நுட்பமானது. ஆனால் அது ஒரு கட்டிடத்தின் இடுக்கில் விழுந்து வேர்விட்டுச் செடியாகி, மரமாகிக் கட்டிடத்தையே பெயர்த்துத் தள்ளுகிறது அப்படித்தான் நல்லவர் மனதையும் மிக எளிதில் கெட்ட சக்தி மாற்றி அணைய வைக்கும்

 

08. இனிய வாழ்க்கை கிட்டும் என்ற விருப்பத்தில் பரதர்மத்தில் பிரவேசிப்பது குளத்தில் குளிக்கப் போய் சேற்றை அள்ளிப் பூசுவது போலாகும்.

 

09. நம்பிக்கை இல்லாதவனுக்கு இவ்வுலகம் இல்லை, அவ்வுலகமும் இல்லை.

 

10. கடவுளைக் கான் நினைப்பவனுக்கு கல்லும் கடவுளே, கடவுளைக் கல்லாகப் பார்ப்பவனுக்கு கடவுளும் கல்லே.

 

11. சத்தியவான்களான உத்தம புருஷர்களுக்கு கிருதயுகம் யுத்தமானது என்றும் பொய்மையாளர்களான அதர்மபுருஷர்களுக்கு கலியுகம் உன்னதமானதென்றும் கலியுகத்தில் ஒருவன் சத்தியவானாகவும், தருமாத்மாவாகவும் இருந்தால் பூலோகத்தார் அவனைப் பரிகாசம் செய்வார்களே தவிரப் பெரிதாகப் போற்றமாட்டார்கள்.

 

12. நீரில் ஏற்படும் நுரைக்குச் சமமான இந்த மனிதப் பிறவியை நிலையானது என்று எண்ணுகின்றனரே மூடர்கள்.

 

13. இந்த வையகம் முழுவதையும் தமதாக்கிக் கொள்ள வேண்டும் என்று பேராசை கொண்டு ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டிருக்கின்றனரே அந்தோ பரிதாபம்.

 

14. நம் முன்னோர்கள் கொண்டு போக முடியாததை நாம் மட்டும் கொண்டு போக முடியுமா? இதையெண்ணிப் பார்ப்பதில்லையே என் செய்வேன் யான்.

 

15. பராக்கிரமமும் நான் என்ற மமதையும் நானே செய்தேன் இனியும் நானே செய்வேன் என்ற ஆணவமெல்லாம் நெருப்பில் பட்ட இலவம் பஞ்சு போல் காலமென்னும் சக்கரத்தில் அகப்பட்டு அழிந்து விடும்.

Load More