விரிவுரை

ஆலயத்தில் நடைபெறும் இந்துசமய விளக்கம்

ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயமானது இந்துசமய விளக்கவுரையை இந்துசமயத்தை பற்றி அறிய விரும்பி வரும் அனைவருக்கும் மிகவும் சிறந்த முறையில் அவர்கள்  சுலபமாக அறிந்து கொள்ளும் வகையில் தெரிவிக்கின்றது.

 

அந்த வகையில் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் தினம் தோறும் ஆலயத்துக்கு வருகை தருகின்றனர். அவர்கள் விரும்பி கேட்கும் பட்சத்தில் ஆலயத்தால் அவர்களுக்கு இந்துசமய விளக்கவுரை கொடுக்கபடுகின்றது.

அதிலும் ஜேர்மன் நாட்டை சேர்ந்த மக்கள் இந்துசனாதன தர்மத்தை அறிவதில் மிகவும் ஆர்வம் உள்ளவர்களாக திகழ்கின்றனர். வருடத்துக்கு சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஜேர்மன் மக்கள் இந்துசனாதனதர்ம விளக்கத்தை கேட்பதற்காக ஆலயத்துக்கு விஜயம் செய்கின்றனர். அதில் பலர் எமது சனதனதர்மத்தின் நுணுக்கமான கலாசார விதிமுறைகளை கேட்டு ஆச்சரியபடுகின்றனர். பலவிதமான கேள்விகளை வினாவி தமது எண்ணங்களை வெளிபடுதுகின்றனர்.

படத்தில் ஆலயகுரு அவர்களால் மக்களுக்கு விளக்கமளிக்கபடுகின்றது.

அதுமட்டுமல்லாமல் ஆலயத்தில் நடைபெறும் பூஜைகளை காண்பதற்கும் அதில் தாமும் கலந்துகொள்ள வேண்டும் என்கின்ற எண்ணத்துடன் பல ஐரோப்பிய நாட்டு  மக்கள் வருகை தருகின்றனர். சிலர் பூஜை விளக்கங்களை கேட்டு தாமும் பூஜைகளை ஏற்று செய்வதற்கு விருப்பம் தெரிவிக்கின்றனர்.

 

  
படத்தில் ஆலயகுரு அவர்களால் பூஜை பற்றிய விளக்கம் கொடுக்கபடுகின்றது.