முகப்பு

பக்தர்களின் நலன் கருதி ஆலயத்தின் புதிய போக்குவரத்து சேவை

அம்பிகை அடியார்களே! வயோதிபர்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறைந்த பகுதிகளில் வாழும் அன்னை அடியவர்களின் நலன் கருதி ஆலயமானது புதிய போக்குவரத்து சேவையை ஆரம்பித்துள்ளது இச் சேவையை பயன்படுத்தி ஆலயத்துக்கு வருகைதர விரும்பும் அடியார்கள் ஆலயத்துடன் தொடர்புகொள்ளவும்..

தொலைபேசி: 0049 2388 302223 தொலைநகல்: 0049 2388 302224 மின்னஞ்சல் மூலம் தொடப்புக்கொள்ள இங்கே அழுத்தவும்….


திருவிழாக் காலங்களில் தொண்டர்கள்

அம்பிகை அடியார்களே!

எதிர் வரும் 15.06.2020 தொடக்கம் 29.06.2020 வரை நடைபெறவிருக்கும் ஆலய திருவிழா காலங்களில் ஆலய திருப்பணிகள் மற்றும் ஒழுங்குபடுத்துதல் போன்ற திருத்தொண்டுகளில் கலந்து கொள்ள விரும்பும் அடியார்கள் இப்போதிலிருந்தே தங்கள் பெயர்விபரங்களை ஆலயத்தில் பதிவுசெய்து கொள்ளவும். தொண்டர்களுக்கு திருவிழா காலங்களில் விசேட ஒழுங்குபடுத்துனர் அடையாள அட்டை ஆலயத்தால் வழங்கப்படும்.


ஆலய வருடாந்த மகோற்சவம் 2020

15.06.2020: கொடியேற்றம் 28.06.2020: தேர் உற்சவம் 29.06.2020: தீர்த்தம்


காலத்தின் தேவை கருதி மிக விரைவாக அமையவிருக்கும் கலாச்சார மையம் பற்றிய விசேட அறிவித்தல்… அம்பிகை அடியார்களே!

ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தால் மக்களின் நலன்கருதி எமது காலாசார பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு காட்டுமான பணிதான் இக் கலாச்சார மையம் ஆகும்.. ஆனாலும் நிதி நெருக்கடி காரணமாக இப்பணியை விரைவாக நிறைவேற்ற முடியாத நிலை இருந்து. இந்த நிலையை சமாளிக்கும் முகமாக  நாம்  இன்னொரு திட்டத்தை உங்கள் முன் வைக்கின்றோம். அதாவது இந்த சிறந்த பணிக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் கீழ்காணும் இந்த வழிமுறைகளை கையாண்டு எமது கலை கலாச்சாரத்தை இந்த நாட்டில் நிலைநிறுத்த உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்..

மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்துதவும்………..


 

ஆலயம்

ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் (நோற்ரையின் வெஸற்பாலன்) ஹம் நகரில் அமைந்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு 7ம் மாதம் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்ற இவ் ஆலயம் ஐரோப்பிய நாடுகளில் ஆகம விதி நெறிப்படி அமைக்கப்பட் ராஜகோபுரத்துடன் மற்றும் விமாணத்துடன் கூடிய பெரிய ஆலயமாகும்.

 

தினம்தோறும் மூன்றுகாலப் பூசைகள் நடைபெற்று வரும் காமாட்சி அம்பாள் ஆலயத்தில், வருடாந்த மஹோற்சவ காலத்தில் அன்னை காமாட்சி அம்பாள் ரதத்தில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருள் மழை பொழியும் பொருட்டு வீதியுலா வரும் வேளையில் சுமார் 25.000க்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து அன்னையின் அருளெனும் மழையில் நனைகின்றனர். இவர்களில் 5.000 மேற்பட்டவர்கள் வெளிநாடுகளிலிருந்து அன்னையின் உற்சவத்தை கண்டுகழிப்பதற்காக வருகை தந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

கிட்டத்தட்ட 1,5 தொடக்கம் 1,7 மில்லியன் யூரோவை பக்தர்களின் நன்கொடை, வங்கி கடன் உதவி இவற்றின் மூலமாகப் பெற்று, ஹம் நகரில் வசிக்கும் கட்டிடநிபுணர் திரு. ஹயின்ஸ் ரைனர் ஹைஸ்கோஸ்ற் என்பவரின் கட்டிட கட்டுமானப் பணியுடனும், இந்திய சிற்பக் கலைஞர்களின் சிற்பச் சிறப்பாற்றலுடனும் சுமார்  (27*27) 729 மீற்றர் சதுரப்பரப்பில் ஆலயம் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது.

 

அன்னை காமாக்ஷி அம்பாள் தன்னை நாடி வரும் அடியார்களை தன் அன்புப்பார்வையால் அருள்கோடி அள்ளி வழங்குகிறாள். காமாட்சி எனும் சமஸ்கிருத சொல்லின் பொருள்- அன்புடன் பார்க்கும் கண் என்பதாகும். அன்னையானவள் தன் குழந்தையை எப்படி பார்ப்பாளோ அதே போல அண்டசராசரங்களையும் படைத்து, காத்து, ரட்சித்து வரும் அன்னை காமாட்சியும் தன் குழந்தைகளான எம்மை தனது அன்புப் பார்வையால் முத்திப் பாதைக்கு இட்டுச் செல்கிறாள்.

 

அன்னையின் அருள்பெற உங்கள் அனைவரையும் காமாட்சி அம்பாள் ஆலயம் அன்புடன் வரவேற்கிறது!

 

ஆலயகுரு

அனைவருக்கும் வணக்கம்!

அம்பாளின் அருளும் குருவின் ஆஸியும் உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டி எமது பரிபூரண ஆஸிகளையும் உங்களுக்கு வழங்குகிறோம்.

ஆலய ஆதீனகர்த்தா

“ப்ரதிஸ்டா கலாநிதி” “ஸ்ரீவித்யா உபாசகர்””பக்குவத்திருமணி “

சிவஸ்ரீ.ஆறுமுக பாஸ்கரக்குருக்கள்