உள்நாட்டு பணிகள்

கலாச்சார மையம்

 

அம்பிகை அடியார்களே!

 

ஹிந்து சங்கரர் சிறி காமாட்சி அம்பாள் ஆலயம் மத்திய ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் அமைந்துள்ள மிகப் பெரிய இந்து ஆலயமாகும். இவ் ஆலயமானது ஆலயப் பணிகளுடன் பல பொதுப்பணிகளையும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செய்து வருகிறது.

 

அந்த வரிசையில் எமது பாரம்பரிய கலை பண்பாட்டு காலாச்சார விழுமியங்களை எதிர்காலச் சந்ததியினரின் கலாச்சாரப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிறி காமாட்சி அம்பாள் ஆலயமானது மிகப் பெரிய கலாச்சார மண்டபம் ஒன்றை அமைக்கத் தீர்மானித்துள்ளது. அதில் நூலகம், அருங்காட்சியகம் (எமது மூதாதையர்கள் பாவித்த பொருடகள் மற்றும் பல பழமை வாய்ந்த அரும் பொருட்கள்), இந்து மாநாடு போன்ற சத்சங்கம் நடைபெறுவதற்கான மண்டபம், யோகாப் பயிற்சியகம், பரதம்,சங்கீதம், வாத்தியங்கள் போன்ற கலைகளைக் கற்றுக் கொடுப்பதற்கான பாடசாலை, மற்றும் பல கலை அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த கலாசார மையம் அமையவுள்ளது.

 

இந்தப் பணியின் முதற்கட்டமாக கலாச்சார மையம் அமைப்பதற்கான காணியை பக்தர்களின் ஆதரவுடனும் வங்கிக் கடனுதவி மூலமாகவும் வாங்கியுள்ளோம். இருப்பினும் கட்டிடம் அமைப்பதற்கான பணியில் ஈடுபட முடியாத நிலமை உருவாகியுள்ளது காரணம் காணிக்கு வாங்கிய வங்கிக் கடனை மீள்செலுத்தினால் மட்டுமே வங்கியில் மீண்டும் கடனுதவி பெற முடியும். வங்கியில் கடனுதவி பெற்றால் தான் கட்டிடப் பணியை விரைவாக ஆரம்பிக்க முடியும்.

 

எனவே அன்னை அடியவர்கள் அனைவரும் இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் எமது கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பதற்கு இக் கலாச்சார மையம் அமைய வேண்டியதன் முக்கியத்தை உணர்ந்து உங்களால் முடிந்த நிதியுதவியைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

 

இத் திருப்பணிக்கு நீங்கள் உதவக் கூடிய வழிகள்

1. நீங்கள் விரும்பிய தொகையை நன்கொடையாகச் செலுத்தலாம் (மீள்வரி ரசீது வழங்கப்படும்)

2. வட்டியற்ற கடனுதவி செய்யலாம் (5வருடங்களில் திருப்பி செலுத்தப்படும்)

3. உங்கள் குடும்ப் பெயரில் ஒரு சதுரமீற்றர் காணியை வாங்கிக் கொடுக்கலாம் (150 யூரோ)

 

நீங்கள் நன்கொடை செய்ய விரும்புகிறீர்களா? மேலதிக விபரம் வேண்டுமா?

நிச்சயமாக: தயவுசெய்து எமக்கு உங்கள் கேள்வி, கருத்துக்களை எழுதி அனுப்புங்கள்.